மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி மற்றும் அதிவேக எஞ்சின் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டியும், பெண்கள் கையில் கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கியும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்வதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறி இந்த போராட்டம் நடைபெற்றது.கடலில் இறங்கி போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததை கண்டித்து அவர்கள் தரங்கம்பாடி கடைவீதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் தரங்கம்பாடி- காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.