தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தோட்டத்திற்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மூர்த்திநாயக்கன்பட்டியில் செல்வராஜ் என்ற விவசாயி, தனது தோட்டத்தில் செவ்வாழை பயிரிட்டுள்ள நிலையில், இன்னும் 2 மாதத்தில் தார் வைக்க உள்ள வாழை மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். ஆயுதபூஜையை ஒட்டி வாழை கன்றுகள் மற்றும் மரங்களை வெட்டியிருப்பதாக கூறும் விவசாயி, இதனால் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.