ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே மயானத்திற்கு செல்ல போதிய பாதை இல்லாததால் உடல்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். தாழனூர் என்ற இந்த கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்கு மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அரசு கையகப்படுத்தியதாக தெரிகிறது.இதற்காக பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறும் மக்கள், புதிதாக சுடுகாடு ஒன்றை பாதையுடன் அமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.