சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 20 நாட்களாகியும், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சுங்கச்சாவடி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கீழச்சிவல்பட்டி காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.