நீலகிரி மாவட்டம் குன்னூரில் 50 சதவிகிதம் கூட கட்டி முடிக்கப்படாத நகர்ப்புற நலவாழ்வு மையத்தை, முதலமைச்சர் காணொளி மூலமாக திறந்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதில் குன்னூர் உமரி காட்டேஜ் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் 50 சதவீதம் பணிகள் கூட முடிவடையாத நிலையில், இரவோடு இரவாக அலங்காரம் செய்து திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நோயாளிகளுக்கான கழிவறைகள், கதவு மற்றும் ஜன்னல் போன்றவை அமைக்கப்படாமல் திறக்கப்பட்டுள்ளது.