சென்னை அசோக் நகரில் உள்ள பட்டுக்கோட்டை மெஸ்ஸில் கெட்டுப்போன சிக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறி, உணவக ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை மெஸ்ஸிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர், சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட முயன்றுள்ளார். அப்போது, கெட்டுப்போன நிலையில் கடுமையாக துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், உணவக ஊழியரிடம் முறையிட்டார். அப்போது சிறிய தவறு நடக்கத்தான் செய்யும் என அலட்சியமாக பதில் அளித்தார்.