தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் விவசாய பயன்பாட்டுக்கு எனக் கூறி குளத்தில் அள்ளப்படும் வண்டல் மண், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மண்பாண்ட தொழில் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள சமீபத்தில் அரசு அனுமதி அளித்த நிலையில், அதனடிப்படையில் அனுமதி பெற்று ஏரல் அடுத்த பெருங்குளத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் வண்டல் மண் அள்ளப்பட்டு வருகிறது. அவை ஏரல் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அதற்கு அதிகாரிகளும் துணை போவதாகவும் கூறும் பொதுமக்கள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.