மயிலாடுதுறை அருகே காளி உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காளி கிராமத்தில் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் தரமில்லாமல் உள்ளதாகவும், இலவச வீட்டு மனை பட்டா வழங்காததையும் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.