தனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாககூறி 5 லட்சம் வாங்கிகொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஏமாற்றிவிட்டதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கால் டாக்சி ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.மாச்சனூர் பகுதியை சேர்ந்தவர் கால் டாக்ஸி ஓட்டுனர் கிருபானந்தம். இவரது தம்பிக்கு கிளார்க் வேலை வாங்கி தருவதாககூறி, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எபிநேசர் ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படும் நிலையில் அதற்கான வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தான் பணம் வாங்கியது உண்மைதான் என்பதை எபிநேசர் ஒப்புக்கொள்வதுபோன்ற வீடியோவை வைத்து விசாரணை நடந்து வருகிறது.