மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சிலை அமைக்க போவதாக கூறி விவசாய நிலத்தை திமுக முன்னாள் MLA ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணிக்கு சிலை அமைக்க உள்ளதாக கூறி தனது நிலத்தை திமுக முன்னாள் MLA கல்யாணம் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் அத்துமீறி மரக்கன்றுகளை நட்டு வருவதாக குத்தாலத்தை சேர்ந்த விவசாயி பாஷ்யம் என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க விவசாயி ஏடிஎஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார்.