கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தர்மநல்லூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகுவதாக கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் சுகாதாரமாக இல்லை என மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.