ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என கூறி, அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியின் சாதாரண கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், ஊராட்சி கோட்டையில் இருந்து கடந்த சில நாட்களாக மாநகராட்சி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை என குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், 15 நாட்களுக்குள் அனைத்து குளறுபடிகளும் சீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படும் என தெரிவித்தனர்.