நெல்லையப்பர் கோவிலுக்குள் ஷூ அணிந்து காவலர்கள் சென்ற வீடியோவை பார்த்து பக்தர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி நாளன்று நெல்லை டவுன் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் காந்திமதி அம்பாள் சன்னதி முகப்பு பிரகாரம் வரை போலீசார் ஷூ காலுடன் சென்றனர். மேலும் தெப்பக்குளம் அமைந்துள்ள பகுதிகளிலும் காலணியுடன் காவலர்கள் இருந்ததால் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.