திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்ததாக 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு சிலர் பொதுமக்களை அச்சுறுத்துவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில், அங்கு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், சஞ்சை உள்பட 5 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.