திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூபாய் 2.50 கோடி மோசடி செய்து தலைமறைவான நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியபாளையம் காவல் நிலையத்தில் தங்கள் மனுக்களை பெறவில்லை என புகார் அளிக்க வந்த மக்கள் குற்றம்சாட்டினர். நெய்வேலி கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்த ரமேஷ் ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார். 50-க்கும் மேற்பட்டோர் சுமார் 2 கோடியே 50 லட்சம் வரை பணம் செலுத்திய நிலையில் ரமேஷ் ஊரைவிட்டே ஓடினார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நிலையில் தொகை அதிகம் என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்