சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து நிலையத்தில் நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் போலியாக ஜிஎஸ்டி டோக்கன் அச்சிடப்பட்டு மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பார்க்கிங்கில் வாகன ஓட்டிகளிடம் 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், திடீரென பார்க்கிங் ஊழியர்கள் 10 ரூபாயுடன் சேர்த்து 1ரூபாய் 80 காசு வசூலித்ததால் பயணிகள் குழப்பமடைந்தனர். இது குறித்து காரைக்குடி நகராட்சி ஆணையாளரிடம் கேட்ட போது வாகன நிறுத்துமிடத்திற்கு ஜிஎஸ்டி கிடையாது புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.