சாதி சான்றிதழ் கேட்டு, பழனி, சார் ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை விண்ணப்பித்தும் எந்த காரணமும் இன்றி நிராகரிக்கப்படுவதாக பழங்குடி இன மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குதிரையாறு அணை, புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு பளியர் இன சாதி சான்றிதழ் வழங்க கோரி, சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.