திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விசிக பிரமுகரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரணமல்லூர் மேற்கு ஒன்றிய விசிக செயலாளர் சீனு வளவன், சபரி மலைக்கு மாலை போட்டிருந்த நிலையில், நேற்று பூஜைக்காக கோவிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கோழிப்புலியூர் சாலையில் உடம்பில் காயங்களுடன் தூக்கில் தொடங்கியபடி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.