ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முகில்தகம் கிராமத்தில் தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்ததாக கூறி சிலர் ரூபி என்பவரது வீட்டை சேதப்படுத்தி, மரங்களை வெட்டி அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ரூபி குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், பார்த்திபன் என்பவர் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கும்பலாக சேர்ந்து அடாவடியில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இடம் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.