மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாச்சிகுளம் மற்றும் மேலநாச்சிகுளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் டன் கணக்கில் நெல்லை குவித்து வைத்துள்ளனர். நெல்லை கொள்முதல் செய்ய இடைத்தரகர்களை வைத்து அதிகாரிகள் ஒரு மூட்டைக்கு 45 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும், நெல் கொள்முதல் செய்ய தாமதப்படுத்துவதை கண்டித்தும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.