விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கூட்டுறவு சொசைட்டிகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் அத்தியாவசிய பொருட்கள், அதிகாரிகளின் துணையுடன் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாணிப கழகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை வழியில் நிறுத்தி, அரிசி மூட்டைகளை மினி சரக்கு வாகனத்தில் ஏற்றும் வீடியோ இணையத்தில் பகிரப்படுகிறது. மறைந்திருந்து இந்த வீடியோவை எடுத்த நபர்கள், மூட்டைகளை கடத்திய தொழிலாளிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் தர மறுத்ததால் வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.