அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தொடுகாடு ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதில் 6 வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.வருவாய் துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசனை பதவியில் இருந்து நீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.