விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலத்தை அளவீடு செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கையும் களவுமாக பிடிபட்டார். மல்லி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்ய நில அளவையர் கனகராஜை அணுகியபோது, ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கனகராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மாரிமுத்து புகார் அளித்தார். இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கனராஜ், ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது போலீசாரிடம் சிக்கினார்.இதையும் படியுங்கள் : நாகை அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்... கடைமடைக்கு மேட்டூர் அணை நீர் வரவில்லை என புகார்