கோவில் காணிக்கை மற்றும் திருப்பணி நன்கொடையை முறைகேடு செய்த பூசாரிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மால்வாய் கிராம மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மால்வாய் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை, 500 சவரன் தங்க நகை மற்றும் திருப்பணிக்கு பெற்ற நன்கொடையை ஆலய பரம்பரை அறங்காவலரும், கோவில் பூசாரியுமான பாஸ்கரன் மற்றும் அவரது அண்ணன் மகன்களான தனபால், சுரேஷ் கையாடல் செய்துள்ளதாகவும் அதற்கு கோவில் செயல் அலுவலர் எஸ்.செல்வம், உதவி ஆணையர் உமா உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையும் படியுங்கள் : பொங்கல் விழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா