தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அத்ரி என்ற கோரக்கநாதர் கோவிலில் பூசாரி பழனி என்பவர், விதிமுறைகளை மீறி தகடுகளை வைத்து பரிகார பூஜை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கோரக்கர் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கடையம் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், அத்துமீறலில் ஈடுபடும் பூசாரி மீது நடவடிக்கை எடுத்து, புதிய பூசாரியை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.