பழனியில் பெண் வழக்கறிஞரை தாக்கிய கோவில் காவலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், கைது செய்யப்படாததை கண்டித்து, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய சென்ற வழக்கறிஞர் பிரேமலதா, மின் இழுவை ரயிலில் ஏற சென்ற போது காவலாளி மதுரை வீரன் இடமில்லை என்று கூறி அடுத்த ரயிலில் ஏற்றி விட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.