சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, 13 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சத்துணவு அமைப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கண்டரமாணிக்கத்தை சேர்ந்த சரவணன் என்ற அந்த நபர், அரசு பள்ளியில் வேலைப் பார்த்து வருகிறார். பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு மாணவி கூறிய புகாரின் அடிப்படையில், சரவணன் கைது செய்யப்பட்டார்.