வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிவதாக கூறி வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் செய்ததாக இளம்பெண்ணை நாமக்கல் குற்றப்பிரிவு போலீஸார் செய்தனர். பெரியமணலியை சேர்ந்த நவீன்குமார், கோவையில் உள்ள கனரா வங்கி உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்தினி என்பவர்தான் பொள்ளாச்சியில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வருவதாக கூறியதை நம்பி, நவீன்குமார் அவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில். நாளடைவில், தன்வர்தினி குறித்து நவீன்குமார் விசாரித்த போது, அவர் அரசு அதிகாரியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தான் வருவாய் கோட்டாட்சியர் என கூறி தன்னை ஏமாற்றி தன்வர்தினி திருமணம் செய்ததாக நவீன்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதையும் படியுங்கள் : அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்கள் மயக்கம்... சிலர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளால் பாதிப்பு