குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக, சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். நாகராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம், 144 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுடன் சென்று 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி உண்மை என கண்டுபிடித்தனர். இதனையடுத்து,மாமன்ற உறுப்பினர் ஸ்டாலினை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.