திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர் அன்பரசன் என்பவர், இணைப்பதிவாளரின் பெயரை சொல்லி கூட்டுறவு சங்க செயலாளர்களை மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் அன்பரசன், எம்எஸ்சி திட்டத்தின் கீழ் அனைத்து கூட்டுறவு சங்கத்திற்கும் டிராக்டர் கட்டாயம் வாங்க வேண்டும் என மிரட்டி, ஒவ்வொரு டிராக்டருக்கும் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. புதிய கூட்டுறவு சங்க கட்டடங்கள் கட்டும் போதும், இணைப் பதிவாளராக இருந்த காந்திராஜனுக்கு 20 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என மிரட்டி பணம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.