திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கெட்டுப்போன பிரட் விற்பனை செய்த கடை உரிமையாளருடன் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.கல்லூரிக்கு சென்ற தனது மகள் பிரட்டை சாப்பிட எடுக்கும் போது அது கெட்டு போய் விட்டதாக கூறிய வாடிக்கையாளர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.