வேலூரில் வாட்ஸ் அப்பில் வந்த புகாரின் அடிப்படையில் ஜூஸ் கடையில் சோதனையில் இறங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் காலாவதியான பேரீச்சம்பழம், ஐஸ்கிரீமை அழித்தனர். வள்ளலார் பகுதியில் SBI வங்கி எதிரே உள்ள கிருஷ்ணா ஜூஸ் கடையில் காலாவதியான, சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் புகார் வந்துள்ளது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்த போலீசார், 1.5 கிலோ காலாவதியான பேரீச்சம்பழம், 3 கிலோ ஐஸ்கிரீமை அழித்ததோடு கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.