விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்த, பெண் வார்டு உறுப்பினரை, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் செருப்பால் அடிக்க பாய்ந்ததன் காட்சிகள் வெளியாகியுள்ளது. புகார் அளித்த பெண் வார்டு உறுப்பினர் அஞ்சுகத்தின் வீட்டுக்கே சென்ற ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதோடு, கீழே கிடந்த கற்களை கொண்டு தாக்க முயற்சித்தது மட்டுமின்றி காலில் இருந்த செருப்பையும் கழற்றி அடிக்க பாய்ந்தார்.