திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சியில் சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவியிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறு மழைக்கே சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாத அவல நிலை நீடிப்பதாக புகார் தெரிவித்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மோசமான சாலையில் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்வதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளவதாக தெரிவித்தனர். மேலும் தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளையும் சந்தித்து வருவதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விரைவில் சாலையை செப்பனிடுவதாக கூறி பொதுமக்களை சமாளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனிடையே அதிகாரிகள் உறுதி அளித்ததை போல சாலையை சீரமைத்து தராவிடில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். Related Link விவசாய நிலத்தில் சோலார் பேனல் அமைப்பதற்கு எதிர்ப்பு