விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்,துணை ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இ்ந்த கூட்டத்தில், பங்கேற்ற விவசாயி ஒருவர், தான் வாங்கிய ரேஷன் அரிசியில், பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதாக முறையிட்டார்.