காரைக்கால் நகர பகுதிகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என்ற புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். வீட்டுக்கு வீடு நேரடியாக சென்று குப்பைகளை எடுக்க துப்புரவு பணியாளர்கள் வருகின்றார்களா என்பதை கேட்டறிந்த ஆட்சியர் மணிகண்டனின் செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. ஆய்வின் போது பொதுமக்கள் அளித்த புகார்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த ஆட்சியர், இதுவரையில் 90 சதவிகித குப்பைகள் அள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.