திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூதமங்கலம் கிராமத்தில் உள்ள உடையார் தெருவிற்கு ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.