மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி செயளாலரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை கோரி அதிமுகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பேரூராட்சியில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக நிர்வாகி போகர் ரவி கூறியதால் ஆத்திரம் அடைந்த பேரூராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், போகர் ரவியை தாக்கியதாக தெரிகிறது.