திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கட்டப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியும் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாடற்று கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. பாதூர் கிராமத்தில் 2021 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த சமுதாய சுகாதார வளாகத்திற்கு தற்போது வரை முறையாக மின்சார வசதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாழடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டாம் என்றும், சமுதாய சுகாதார வளாகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும் என்றும் அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.