குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்படும் முதலமைச்சர்கள், அமைச்சர்களின் பதவியை பறிக்கும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மசோதாவை தாக்கல் செய்ததன் மூலம் பாஜக அரசு பாசிச அரசு என்பதை உறுதிபடுத்துகிறது என கூறினார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த மசோதாவை திரும்ப பெறும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என முத்தரசன் கேட்டுக் கொண்டார்.