விருத்தாசலத்தில், வீடுகளுக்கு முன்பு வண்ண வண்ண பாட்டில்களை வைத்திருப்பது, பேசு பொருளாகி இருக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் முதல் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருவதால், குடியிருப்புவாசிகள் கடும் அவதி அடைந்து அச்சத்துடன் நடமாடி வந்துள்ளனர். தெரு நாய்களைப் பிடிக்க பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி, அதில் சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம் என பல வண்ணங்களில், தண்ணீர் நிரப்பி, ஒவ்வொரு வீட்டின் முன் பகுதியில் வைத்திருந்தனர். இதனால், தற்போது ஓரளவிற்கு நாய்கள் தொல்லைகளில் இருந்து விடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.