விழுப்புரம் அருகே கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த தேன்மொழி, தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், வறுமை காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.