தென்காசி மாவட்டம் கடையம் அருகே சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகக் கூறி, கேரளாவை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையத்தில் இருந்து ராம்நகர் செல்லும் சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் பயின்றுள்ளனர். இவர்கள் படிப்பை முடித்து சான்றிதழ் கேட்டபோது, கூடுதலாக 50 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கல்லூரி நிர்வாகத்தினர் கேட்டு மிரட்டுவதாக கூறி, பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.