குமரிக் கடலின் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் விதமாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உடன் இருந்த அதிகாரிகளிடம் திருக்குறள் மற்றும் அதன் விளக்கங்களை ஆட்சியர் கேட்டறிந்தார்.