உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து, வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் மரங்களையும், செண்டர் மீடியனில் அரளிச் செடிகளையும் வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், மதுரை எலியார்பத்தி மற்றும் தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. ஆனால், தடையை மீறி கட்டணம் வசூலிப்பதாக கூறி, லாரி உரிமையாளர்கள் மற்றும் வழக்காடிகள் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.