கந்துவட்டி கொடுமையிலிருந்து தங்கள் குடும்பத்தை காப்பாற்ற கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது கல்யாணத்துக்காக அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜனிடம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. 5 நாட்கள் கழித்து 50 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்திவிட்ட நிலையில் மீதமுள்ள 50 ஆயிரம் கடனுக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் வரை வசூலித்தும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிவருவதாக எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அவரது தாய் தற்கொலைக்கு முயன்றார்.