மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மண் சரிவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்துக்குள் உள்ள லட்சுமி தீர்த்த குளத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்த நிலையில், அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஒப்பந்தகாரருக்கு அறிவுரை வழங்கினர்.