கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தீச்சட்டி ஊர்வலம், காலை 6 மணியளவில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் திருக்கோவிலில் இருந்து தொடங்கியது. ஒப்பணக்கார வீதி, உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாகச் சென்று தண்டு மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.