கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேர் தான் உண்மையான குற்றவாளிகளா என்பது தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தேகம் கிளப்பியுள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், கொங்கு மண்டலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பதாகவும் சாடினார்.