கோவையில் இலவச டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விழா 2024 என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரம்பரியமான மாநகர டபுள் டக்கர் பேருந்தை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.